< பயிர் காப்பீடு | crop Insurance Scheme Tamil பயிர் காப்பீடு | crop Insurance Scheme Tamil
how to prepare land for organic in tamil

நெல், மக்காச்சோளம், பருத்தி -பயிர் காப்பீடு செய்க | Crop insurance scheme tamil

62

நெல், மக்காச்சோளம், பருத்தி -பயிர் காப்பீடு | crop insurance scheme tamil

பயிரிடப்பட்டுள்ள நெல், மக்காச்சோளம், பருத்தி ஆகியவற்றுக்குப் பயிர்க்காப்பீடு செய்யுமாறு மதுரை மாவட்ட விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காப்பீடு திட்டம் (Insurance plan) crop insurance scheme tamil 2022

வேளாண்மைத்துறை மூலம் திருந்திய பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் நடப்பு 2021-22ம் ஆண்டு சிறப்பு பருவத்திற்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின்கீழ் மதுரை மாவட்டத்தில் வருவாய் கிராம அளவில் நெல் II சம்பா மற்றும் பிர்க்கா அளவில் மக்காச்சோளம் II, பருத்தி II ஆகிய பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன.

யார் பயனாளிகள் (Who are the beneficiaries) crop insurance scheme tamil

அறிவிக்கை செய்யப்பட்ட கிராமங்களில் அறிவிக்கை செய்யப் பட்டப் பயிர்களைப் பயிரிடும் குத்தகை விவசாயிகள் உட்பட அனைத்து விவசாயிகளும் இந்தத் திட்டத்தில் சேர தகுதிபெற்றவர்கள்.

வங்கிகளில் காப்பீடு (Insurance in banks)

பயிர்க்கடன் பெறும் விவசாயிகள் அனைவரும் இத்திட்டத்தில் அவரது சுய விருப்பத்தின் (Voluntary Scheme) அடிப்படையில் கடன் பெறும் வங்கிகளில் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யலாம்.

பயிர்க்கடன் பெறாத விவசாயிகள் தங்களது விருப்பத்தின் பேரில் சேரலாம்.
விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள பயிர் காலத்திற்கும். அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்பு, புயல், ஆலங்கட்டி மழை, மண் சரிவு, வெள்ளம் போன்ற உள்ளூர் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் இழப்பு போன்ற இனங்களில் பயிர் காப்பீடு வழங்கப்படும்.

ஒரேவிதமான பிரிமியம் (Uniform premium)

crop insurance scheme tamil

கடன் பெறும் விவசாயிகள், கடன் பெறா விவசாயிகளுக்கு ஒரே விதமான பயிர் காப்பீட்டுத் தொகை கிடைக்கும்.

மேலும், விவசாயிகள் சிறப்புப் பருவத்தில் சாகுபடி காலம் நெல் 11 01.08.2021 to 15.11.2021, மக்காச்சோளம் 11 – 01:10.2021 16.12.2021, பருத்தி 11 – 01.10.2021 to 15.12.202) சாகுபடி செய்தவர்கள் தங்கள் அருகில் உள்ள பொது சேவை மையங்கள், தேசிய வங்கி கிளைகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யலாம்.

தேவைப்படும் ஆவணங்கள்(Documents required)

  • விவசாயிகளின் முன்மொழிவு படிவம்
  • பதிவு விண்ணப்பப் படிவம்
  • கிராம நிர்வாக அதிகாரியிடம் அடங்கல்
  • வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கத்தின் நகல்
  • ஆதார் அட்டை நகல்

மேலேக் கூறியுள்ள இந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப் பிக்கும் போது பிரிமியத் தொகையும் உரிய தேதிக்குள் செலுத்த வேண்டும்.

பிரிமியத் தொகை (Premium amount)

நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.488.25ம், மக்காச்சோளத்திற்கு ஏக்கருக்கு ரூ. 371.25 ம், பருத்திக்கு ஏக்கருக்கு ரூ.381.59ம் பிரிமியத் தொகையாக செலுத்த வேண்டும். நெல்லுக்கு 15.11.21ம், மக்காச்சோளத்திற்கு 15.12.21ம், பருத்திக்கு 15.12.21ம் காப்பீடு செய்யக் கடைசித்தேதியாகும்.

வேளாண் துறை அறிவுறுத்தல் (Department of Agriculture Instruction)

பதிவு செய்ததற்கான ஒப்புகைச்சீட்டில் விவசாயிகள் தங்களின் நெல் பயிர் சாகுபடி, வருவாய் கிராமம், சர்வே எண் பயிர் சாகுபடி பரப்பு, வங்கி கணக்கு விவரங்கள் சரியாக பதிவு செய்யப் பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

எனவே, விவசாயிகள் RPMFBY திட்டத்தின்கீழ் நெல் II. மக்காச்சோளம்II, பருத்திII சிறப்பு பருவத்திற்கு உரியத் தேதிக்குள் பதிவு செய்யுமாறு விவசாயிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தகவல்
மாவட்ட ஆட்சியர்
மதுரை.

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   [email protected]


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   [email protected]


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது மகிழ்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.  பகிருங்கள் நன்றி
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *