< முதியோர் உதவித் தொகை திட்டம் | முதியோர் ஓய்வூதிய உதவித் தொகை திட்டம் முதியோர் உதவித் தொகை திட்டம் | முதியோர் ஓய்வூதிய உதவித் தொகை திட்டம்
pension

முதியோர் உதவித் தொகை திட்டம் – பெறுவது எப்படி

551

முதியோர் உதவித் தொகை திட்டம்

ஆதரவற்ற நிலையில் உணவுக்கு வழியின்றி வாழும் முதியவர்களுக்கு அவர்கள் துயரத்தை நீக்க தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் திட்டம் தமிழ்நாடு அரசு முதியோர் உதவித் தொகை திட்டம்.

ஆதரவற்ற முதியோர்

கணவன் அல்லது மனைவி போன்ற மிக நெருங்கிய உறவுகள் இல்லாமல் இருப்பவர்கள், மிக நெருங்கிய உறவுகள் அல்லது பிள்ளைகள் இருந்தும் அவர்கள் ஆதரவு கிடைக்காமல் துன்பப்படும் அறுபது வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஆதரவற்ற முதியோர் என்று குறிப்பிடப்படுகின்றனர்.

முதியோர் ஓய்வூதிய உதவித் தொகை திட்டம்

அறுபது வயதிற்கு மேற்பட்ட மக்கள் மற்றும் எவாின் ஆதரவுமின்றி வாழும் முதியோர்களுக்கு மாதம் ரூ. 1000 வீதம் வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை

ஆதரவற்ற முதியோர் எனக் கருதப்படும் ஆண்கள் மற்றும் பெண்கள், தாலுகா அலுவலகங்களில் கிடைக்கும் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, அதற்குத் தேவையான வயது, இருப்பிடச் சான்றுகளை இணைத்து சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பம் அளிக்க வேண்டும்.

வயது சான்று

தமிழ்நாடு அரசால் அரசு பதிவு பெற்ற மருத்துவர்கள் வயது சான்றிதழ்கள் வழங்கும் தகுதியுடையவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அவர்களிடம் படிவத்தில் வயது சான்றிதழ் பெறப்பட வேண்டும். ஆனால், தற்போது குடும்ப அட்டை நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்ற இரு ஆவணங்களையும் அடிப்படையாக கொண்டு வயது சான்றிதழ் நிரூபணம் தேவைப்படுகிறது. ஏனெனில், வயது சான்றிதழ் பெறுவதில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதால் வயது நிரம்பாத தகுதியில்லாத பலர் அரசின் இச்சலுகையை பெற வாய்ப்புள்ளதால் இந்த ஏற்பாடு.

இருப்பிட சான்று

தமிழ்நாடு அரசு இருப்பிட சான்று மற்றும் பரிந்துரை அளிக்க விண்ணப்பிப்பவர் வசிக்கும் பகுதியை சேர்ந்த நகர்மன்ற / மாமன்ற உறுப்பினர்கள், கிராமப் பஞ்சாயத்துத் தலைவர், நகரமன்றத் தலைவர், மாநகர மன்றத் தலைவர் (மேயர்), ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர், மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், மத்திய அல்லது மாநில அரசு பதிவு பெற்ற அதிகாரிகள், முதியோர் இல்ல நிர்வாகிகள் போன்றவர்கள் இருப்பிடம் மற்றும் பரிந்துரைக்கான சான்றுகளை அளிக்கலாம். (இக்கருத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ளவும் இருப்பிடச் சான்று வட்டாட்சியர் அலுவலகத்தில் பெறப்பட்டதாக இருக்க வேண்டும்.)

விண்ணப்பங்கள் ஆய்வு

இந்த விண்ணப்பங்கள் தாசில்தார் அலுவலகத்திலிருந்து கிராம நிர்வாக அலுவலருக்கு அனுப்பப்பட்டு விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் உண்மைதானா என்று ஆய்வு செய்யப்படுகிறது. பின்பு அவரின் பரிந்துரை பெறப்படுகிறது.

உதவித் தொகை

கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து பெறப்பட்ட ஆய்விற்குப் பின் உள்வட்ட வருவாய் ஆய்வாளரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவாய் அலுவலரின் பரிந்துரையின் பேரில் தாலுகா அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விண்ணப்பித்தவருக்கு மாதம் ரூ. 1000 உதவித் தொகையாக வழங்க உத்தரவுகளை பிறப்பிக்கின்றனர். இந்த உத்தரவிற்கு பின்பு விண்ணப்பித்தவருக்கு அவர் இறக்கும் வரையில் மாதந்தோறும் உதவித் தொகை தபால் அலுவலக பணவிடை (Money Order) வழியாக அளிக்கப்படுகிறது.

ஆதாரம்: தமிழ்நாடு அரசு சமூக நலத்துறை

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   [email protected]


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   [email protected]


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது மகிழ்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.  பகிருங்கள் நன்றி
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *