< ஊதுவத்தி விற்பனை செய்ய முகவர்கள் தேவை | முகவர்கள் தேவை ஊதுவத்தி விற்பனை செய்ய முகவர்கள் தேவை | முகவர்கள் தேவை
ஊதுவத்தி

ஊதுவத்தி விற்பனை செய்ய முகவர்கள் தேவை

127

ஊதுவத்தி விற்பனை செய்ய முகவர்கள் தேவை :

ஊதுவத்தி வகைகள்

பல விதமான மணம் கமழும் ஊதுவத்திகள் இருக்கின்றன.

 • அகர்பத்தி
 • சந்தன வத்தி
 • மட்டிப்பால் வத்தி
 • மல்லிகைப்பூ வத்தி
 • தாழம்பூ வத்தி
 • ரோஸ் வத்தி

இவை எல்லாவற்றையும் செய்யும் முறை ஒன்று தான். ஆனால், சேர்க்கும் பொருள்கள் தான் வேறு.

அடிப்படையான பொருள்கள்

வழவழப்பான பலகை

ஊதுவத்தி தயாரிக்க முக்கியமாக வழவழப்பான மணை(பலகை) தேவை. சுமார் 60 செ.மீ. நீளமும் 30 செ.மீ. அகலமும் உள்ள பலகை மீது வைத்து ஊதுவத்திகள் தயரிக்கப்படுகின்றன.

மூங்கில் குச்சிகள்

சுமார் 15 செ.மீ. முதல் 25 செ.மீ. நீளம் வரை இருக்கும் மூங்கில் குச்சிகள் தேவை இவைகள் தயாரிப்புப் பொருள்கள் விற்கும் கடைகளிலேயே கிடைக்கும். இவை எல்லா வகையான ஊதுவத்தி தயாரிப்புக்கும் அடிப்படைத் தேவையாகும்.

சந்தன வத்தி

தேவையான பொருள்கள்

 • சந்தன பவுடர் – 500 கிராம்
 • சாம்பிராணி – 500 கிராம்
 • வெட்டிவேர் – 200 கிராம்
 • கிச்சிலிக் கிழங்கு பொடி – 100 கிராம்
 • புனுகு – 2 கிராம்
 • கஸ்தூரி – 2 கிராம்
 • பன்னீர் – 100 மில்லி

செய்முறை

வெட்டிவேர் கிச்சிலிக் கிழங்கு பொடி இரண்டையும் நன்றாக இடித்து மெல்லிய துணியில் சலித்து நைசாகத் தாயரித்துக் கொள்ளவும். அம்மியில் அல்லது கலுவத்தில் சாம்பிராணியை வைத்து விழுதாக அரையுங்கள். ஒரு பாத்திரத்தில் எடுத்துப் போட்டு, அதனுடன் சந்தனப் பவுடர், வெட்டிவேர், கிச்சிலிக் கிழக்குப் பொடியைச் சேர்த்துப் பன்னீர் விட்டுக் கெட்டியாகப் பிசையவும். கடைசியில் புனுகு, கஸ்தூரி இரண்டையும் சேர்த்துப் பிசையவும். விழுது கையில் ஒட்டக் கூடாது. அப்படியே ஒரு மணி நேரம் மூடி வைக்கவும்.

மூங்கில் குச்சிகளை எடுத்து சுத்தப்படுத்துங்கள். சுண்டைக்காயளவு மேற்கண்ட கலவையை எடுத்து மணையில் சிறிதளவாகப் பரப்பவும். ஒரு மூங்கில் குச்சியின் அடிப்பாகத்தில் இரண்டு செ.மீ. விட்டு தள்ளி மணை மீது வைத்து கலவை குச்சியில் ஒட்டிக் கொள்ளுமாறு மெள்ள உருட்டவும். கலவைப் பொருள் குச்சியின் அடிப்பாகத்தில் இடம் விட்டது போக மீதமுள்ள பகுதி முழுவதும் சமமாகப் பரவி இருக்க வேண்டும். ஆரம்பத்தில் கடினமாகத் தோன்றினாலும், பழகிவிட்டால், ஊதுவத்தி உருட்டுவதற்கு எளிதாக வரும். பின் கலவை ஒட்டியுள்ள பகுதியை இரண்டு விரல்கள் மற்றும் உள்ளங்கையால் தேய்த்து விடவேண்டும்.

பின் மெல்லிய எண்ணெய்க் காதிகத்தை நிழலில் பிரித்துப் போட்டு அதன் மீது பரப்பி விடுங்கள். இரவு முழுவதும் உலர்ந்த பிறகு எல்லாவற்றையும் சேகரிக்கவும். குச்சியின் அடியில் வெற்றிடமாக உள்ள பகுதியில் ஏதேனும் ஒரு நிறச் சாயம் கொண்டு தேய்த்து விடுங்கள். பெரும்பாலும் சிவப்பு மற்றும் பச்சை சாயத்தையே தேய்ப்பர். இது பார்வைக்கு அழகாக இருப்பதுடன் அடிப்பகத்தைத் தனியாகக் காட்டும்.

வசதியிருந்தால் அட்டைப் பெட்டிகள், அட்டைக் குழாய்கள், தகரக் குழாய்கள் தயாரித்து தேவைக்கேற்பவும் விலைக்கேற்பவும் 10, 50, 100 வத்திகளை மெல்லிய எண்ணெய் காகிதத்தில் சுற்றி அதனுள் போட்டு மூடி விடலாம். இவற்றை எடுத்துச் சென்று கடைகளில் கொடுத்து விற்கச் செய்யலாம். அல்லது நீங்களே நேரிடையாகப் பொதுமக்களிடம் விற்கலாம்.

கதம்ப சந்தன வத்தி

தேவையான பொருட்கள்

 • சந்தனப் பவுடர் – 300 கிராம்
 • சாம்பிராணி – 100 கிராம்
 • மட்டிப்பால் – 75 கிராம்
 • மைனாலக்கிடிப் பட்டை – 150 கிராம்
 • கிச்சிலிக் கிழங்கு – 75 கிராம்
 • கோரைக் கிழங்கு – 75 கிராம்
 • வெட்டிவேர் – 30 கிராம்
 • விளாமிச்சம் வேர் – 30 கிராம்
 • அன்னசிப் பூ – 30 கிராம்
 • ரோஜா பூ – 30 கிராம்
 • இலவங்கப்பட்டை – 30 கிராம்
 • இலவங்கம் – 10 கிராம்
 • கார்போக அரிசி – 30 கிராம்
 • ஜாதி பத்திரி – 10 கிராம்
 • கிளியூரல் பட்டை – 30 கிராம்
 • ஏலக்காய் – 30 கிராம்
 • மரிக்கொழுந்து – 30 கிராம்
 • தவனம் – 30 கிராம்
 • ஜாதிக்காய் – இரண்டு

செய்முறை

சந்தனப் பவுடர், சாம்பிராணி, மட்டிப்பால் தவிர மற்ற பொருள்களை நன்றாக இடித்து மெல்லிய துணியில் சலித்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போடவும். சாம்பிராணி, மட்டிப்பால் இரண்டையும் அம்மி அல்லது கலுவத்தில் நைசாக அரைத்து அவற்றுடன் போடுங்கள். சந்தனப் பவுடரையும் போட்டு பன்னீர் கலந்து விட்டுப் பிசையுங்கள். எல்லாப் பொருள்களும் ஒன்றாகும்படி கலவையைப் பிசைந்ததும், மூடி ஒரு இரவு முழுதும் வைத்திருங்கள். மறுநாள் காலை எடுத்து ஊதுவத்தி தயாரியுங்கள். இந்த ஊதுவத்தி சந்தன மனத்துடன் பலவிதமான மணத்துடன் சேர்ந்து இருக்கும்.

இதற்கு பெரிய மூலதனம் தேவையில்லை. ஊதுவத்திகள் சாதி மத பேதமின்றி அனைவராலும் உபயோகிக்கப்படுகிறது. ஊதுவத்திகள் தயாரித்து நம் நாடுகளில் மட்டுமன்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம். ஊதுவத்தி தயாரிக்க சிறு மூலதனத்துடன் குடும்பத்திலுள்ள நான்கைந்து நபர்களுடன் தொடங்கலாம். ஊக்கம் இருந்தால் போதும். போதுமான இலாபம் கிடைக்கும்.

இதுபோல் இயற்கை முறையில் தயார் செய்ப்படும் அகர்பத்தி மற்றும் பூஜை பொருள்கள் விற்பனை செய்ய தமிழகம் முழுவதும் முகவர்கள் தேவை. மாதம் 20,000 வரை வருமானம் பெற முடியும்.

வீடுகளுக்கும் தேவையான அகர்பத்திகள் குறைந்த விலையில் கிடைக்கும்.

தொடர்புக்கு :
18 Incense Stick
S.மதன்
சிங்கம்புணரி
9952170931

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   [email protected]


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   [email protected]


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது மகிழ்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.  பகிருங்கள் நன்றி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *