< புளி சாகுபடி | ஒரு கிலோ புளி விதை விலை ரூபாய் 2000 புளி சாகுபடி | ஒரு கிலோ புளி விதை விலை ரூபாய் 2000
புளி சாகுபடி

ஒரு கிலோ புளி விதை, விலை ரூபாய் 2000 – புளி சாகுபடி

1063

ஒரு கிலோ புளி விதை விலை ரூபாய் 2000 | புளி சாகுபடி 

ஒரு கிலோ புளிய மரத்தின் விதை 2000 ரூபாய் என்று சொன்னால் நம்பமுடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த பேராசிரியர் திரு.பாலசுப்பிரமணியன் அவர்கள் ஓர் இணைய கலந்துரையாடலில் புளி அடர்நடவு மற்றும் மதிப்பு கூட்டுதல் என்ற தலைப்பில் பேசுகையில் புளி மற்றும் புளியங்கொட்டைக்கு மிகப் பெரிய எதிர்காலம் இருப்பதாக கூறினார்கள். மேலும் புளியங்கொட்டையை மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும் பொழுது ஒரு கிலோ 2 ஆயிரம் வரை விற்பனை செய்ய முடியும் என்று கூறினார்கள்.

எப்படி எனில் புளிய விதை மதிப்பு கூட்டும் போது கிடைக்கும் பிசின் ஆனது பலதரப்பட்ட வேலைகளுக்கும் மற்றும் மருத்துவப் பொருள் தயாரிப்பு, உணவு பொருள் தயாரிப்பு மற்றும் மனித பல் கட்டுதல் போன்றவற்றுக்கு இன்றியமையாத மூலப்பொருளாக அமைகிறது. எனவே விவசாயிகள் தண்ணீர் இல்லாத இடங்களில் கூட புளியமரத்தை  சாகுபடி செய்தால் அதிக லாபம் பெற முடியும் என்று பேராசியர் திரு.பாலசுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்தார்கள்.

விளம்பரம் : நாட்டு கோழி மொத்த விற்பனைக்கு : 9566983150

புளி விதையில் இருந்து பிசின் எடுக்க அரசு நிதி உதவி பெற முடியும் என்பது மிக சிறப்பான அம்சமாகும்.

மேலும் புளி அடர்நடவு என்பது மூன்று வருடத்தில் காய்க்கும் ஒரு தொழில்நுட்பமாகும். இந்த தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்ள வனக்கல்லூரி மற்றும் மர ஆராய்ச்சி நிலையத்தின் சார்பாக தொலைதூர பயிற்சி அளிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்கள். அதேபோன்று புங்கன் மரத்திற்கு வருங்காலத்தில் மிகப்பெரிய சந்தை வாய்ப்பு உள்ளது என்பதையும் தெரிவித்தார்கள்.


விளம்பரத்தார் மற்றும் கட்டுரை ஆசிரியரை தொடர்புகொள்ளும் பொழுது மகிழ்.காமில் பார்த்ததாக நினைவு கூறவும். உங்கள் தொழிலை விளம்பரம் செய்ய [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.


மேலும் அவர்களை தொடர்பு கொள்ள:
முனைவர் : திரு.பாலசுப்பிரமணியன் அவர்கள்
பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
மரசகுபடி துறை
வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்
மேட்டுப்பாளையம்
9443505845
9865303506
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *