< ஜி 9 ரக திசு வாழைக்கன்று இலவசம் | Grand Naine ஜி 9 ஜி 9 ரக திசு வாழைக்கன்று இலவசம் | Grand Naine ஜி 9
window g9

ஜி 9 ரக திசு வாழைக்கன்று இலவசம் – பெறுவது எப்படி

752

ஜி 9 ரக திசு வாழைக்கன்று இலவசம் : Grand Naine ஜி 9

ஜி 9 ரக திசு வாழைக்கன்றுகளை விசாயிகள் இலவசமாக பெற்றுக்கொள்ளுமாறு கோவை மாவட்டத் தோட்டக்கலைத் துறை அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் மதுபாலா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

Grand Naine ஜி 9

கோவை மாவட்டம், அன்னூர் வட்டார சிறு, குறு, பெரிய விவசாயிகள் வாழை பயிரிட விரும்பினால், தேசிய தோட்டக்கலை திட்டத்தில் windows ஜி 9 ரக திசு வாழைக் கன்றுகளை இலவசமாகப் பெறலாம்.

5000 வாழைக்கன்றுகள் (5000 banana seedlings)

அதிகபட்சமாக ஒரு விவசாயி, 2 எக்டேருக்கு, 5,000 வாழைக்கன்றுகளை இலவசமாக பெறலாம்.

தேவைப்படும் ஆவணங்கள் (Documents required)

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், ஆதார் கார்டு நகல், சிட்டா, அடங்கல், வங்கி பாஸ் புத்தக நகல் ஆகியவற்றுடன் அன்னூர் தோட்டக்கலை அலுவலகத்தில், விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

எங்கு கிடைக்கும் (Where to get it)

கண்ணம் பாளையம் அல்லது ஆனைகட்டியில் உள்ள அரசு தோட்டக்கலை இல்லத்தில் வாழைக்கன்றுகளை பெற்றுக் கொள்ளலாம்.

மொபைல் எண்கள்  (Mobile Numbers)

அன்னூர், மசக்கவுண்டன் செட்டிபாளையம், பச்சாபாளையம், நாரணாபுரம், கஞ்சப்பள்ளி, ஆம்போதி, அல்லப்பாளையம், வடக்கலூரை சேர்ந்தவர்கள் 97919 98833 என்ற மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

குப்பேபாளையம், காட்டம் பட்டி, குன்னத்தூர், பிள்ளையப்பம்பாளையம், கரியாம்பாளை யம், பசூர், அ.மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர்கள் 95784 52676 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இதேபோல், அக்கரை செங்கப் பள்ளி, குப்பனூர், பொகலூர், வடவள்ளி, காரேகவுண்டன் பாளையம், ஒட்டர்பாளையம், கணுவக்கரை பகுதி விவசாயிகள் 99433 66422 என்ற மொபைல் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.அல்லது தங்கள் ஒன்றியத்தில் உள்ள தோட்டக்கலை துறையை அணுகலாம். 

 

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   [email protected]


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   [email protected]


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது மகிழ்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.  பகிருங்கள் நன்றி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *