< எந்த மாதத்தில் என்ன விதைக்கலாம் | என்ன மாதம் என்ன செடிகள் வளர்க்கலாம் எந்த மாதத்தில் என்ன விதைக்கலாம் | என்ன மாதம் என்ன செடிகள் வளர்க்கலாம்
எந்த மாதத்தில் என்ன விதைக்கலாம்

எந்த மாதத்தில் என்ன விதைக்கலாம்

794

எந்த மாதத்தில் என்ன விதைக்கலாம் | என்ன மாதம் என்ன செடிகள் வளர்க்கலாம்

     எந்தெந்த பயிர்களை எந்தெந்த காலங்களில் வளர்க்கலாம் என்பதை நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர். அதைதான் பட்டம் என்று கூறுகின்றனர் பட்டங்களில் ஆடிப்பட்டம், மாசிப் பட்டம், தைப்பட்டம் என்று பல்வேறு பட்டங்கள் உண்டு. ஆனால் மிகவும் சிறந்த பட்டம் என்று ஆடி பட்டத்தை விவசாயிகள் கூறுகின்றனர். ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழியும் உண்டு. ஆடிப்பட்டத்தை பற்றி கூற வேண்டுமானால் குழந்தையிடம் விதையை போட சொன்னால்கூட, அந்த விதையானது  மளமளவென வளர்ந்து தாறுமாறான அறுவடையை கொடுக்கும். ஏனென்றால் ஆடிப்பட்டத்தில் எந்தவித பராமரிப்பும் இல்லாமல் செடிகள்கொடிகள் வளர்வதற்கு உகந்த கால நிலை காணப்படும். ஜூன் ஜூலை ஆகஸ்ட் மாதங்களை ஆடிப்பட்டம் என்று  வரையறுக்கலாம். ஜூன் ஜூலை ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்களில் என்னென்ன விதைகளை விதைக்கலாம் என்பதை பற்றி சற்றே விளக்கமாக பார்க்கலாம்.

ஜனவரி மாதம் (மார்கழி, தை)
இந்த மாதங்களில் (மார்கழி, தை) கத்தரி, மிளகாய், பாகல், தக்காளி, பூசணி, சுரை, முள்ளங்கி, கீரைகள் ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.நன்கு விளைசல் கிடைக்கும்.

பிப்ரவரி மாதம் (தை,மாசி)
இந்த மாதங்களில் (தை,மாசி) கத்தரி, தக்காளி, மிளகாய், பாகல், வெண்டை, சுரை, கொத்தவரை, பீர்க்கன், கீரைகள், கோவைக்காய் ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.

மார்ச் மாதம் (மாசி, பங்குனி)
இந்த மாதங்களில் (மாசி, பங்குனி) வெண்டை, பாகல், தக்காளி, கோவை, கொத்தவரை, பீர்க்கன் ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.

ஏப்ரல் மாதம் (பங்குனி, சித்திரை)
இந்த மாதங்களில் (பங்குனி, சித்திரை) செடி முருங்கை, கொத்தவரை, வெண்டை ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.


மே மாதம் (சித்திரை, வைகாசி)
இந்த மாதங்களில் (சித்திரை, வைகாசி) செடி முருங்கை, கத்தரி, தக்காளி, கொத்தவரை ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.

ஜூன் மாதம் (வைகாசி, ஆனி)
இந்த மாதங்களில் (வைகாசி, ஆனி) கத்தரி, தக்காளி, கோவை, பூசணி, கீரைகள், வெண்டை ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.

ஜூலை மாதம் (ஆனி, ஆடி)
இந்த மாதங்களில் (ஆனி, ஆடி) மிளகாய், பாகல், சுரை, பூசணி, பீர்க்கன், முள்ளங்கி, வெண்டை, கொத்தவரை, தக்காளி ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.

ஆகஸ்ட் மாதம் (ஆடி, ஆவணி)
இந்த மாதங்களில் (ஆடி, ஆவணி) முள்ளங்கி, பீர்க்கன், பாகல், மிளகாய், வெண்டை, சுரை ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.

செப்டம்பர் மாதம் (ஆவணி, புரட்டாசி)
இந்த மாதங்களில் (ஆவணி, புரட்டாசி) செடிமுருங்கை, கத்தரி, முள்ளங்கி, கீரை, பீர்க்கன், பூசணி ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.

அக்டோபர் மாதம் (புரட்டாசி, ஐப்பசி)
இந்த மாதங்களில் (புரட்டாசி, ஐப்பசி) செடிமுருங்கை, கத்தரி, முள்ளங்கி ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.

நவம்பர் மாதம் (ஐப்பசி, கார்த்திகை)
இந்த மாதங்களில் (ஐப்பசி, கார்த்திகை) செடிமுருங்கை, கத்தரி, தக்காளி, முள்ளங்கி, பூசணி ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.

டிசம்பர் மாதம் (கார்த்திகை, மார்கழி)
இந்த மாதங்களில் (கார்த்திகை, மார்கழி) கத்தரி, சுரை, தக்காளி, பூசணி, முள்ளங்கி, மிளகாய் ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.

நாட்டு விதைகள் வாங்க : 9943847847


மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   [email protected]


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   [email protected]


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது மகிழ்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.  பகிருங்கள் நன்றி
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *