< ஆடு வளர்ப்பு மானியம் | ஆடு வளர்ப்பு வங்கி கடன் 2020 | கால்நடை வளர்ப்பு மானியம் 2020 ஆடு வளர்ப்பு மானியம் | ஆடு வளர்ப்பு வங்கி கடன் 2020 | கால்நடை வளர்ப்பு மானியம் 2020
ஆடு

ஆடு வாங்குறீங்களா? 90% மானியம் அள்ளித்தரும் அரசு!

4966

ஆடு வளர்ப்பு மானியம் | ஆடு வளர்ப்பு வங்கி கடன் 2020 | கால்நடை வளர்ப்பு மானியம் 2020

செம்மறி, வெள்ளாடு வளர்ப்பை ஊக்கப்படுத்தும் நோக்கில் 90 சதவீத மானியத்தில் ஆடுகள் வழங்கப்படுகிறது. இதற்கான அறிவிப்புகளை மாவட்ட கால்நடை துறை வெளியிட்டுவருகிறது.

ரூ.55000 தில் ஆட்டு பண்ணை அமைக்க அழைப்பு

செம்மறி, வெள்ளாடு -அபிவிருத்தி திட்டம் :

தமிழகத்தில் செம்மறியாட்டின் தொகையில் 7.36 விழுக்காடும் வெள்ளாடு தொகையில் 6.02 விழுக்காடும் உள்ளது. தற்போது ஆட்டிறைச்சி தேவை அதிகரித்து வருவதால், செம்மறி மற்றும் வெள்ளாடு வளர்ப்பை அதிகரிக்க கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ஊரக புறக்கடை செம்மறி ஆடுகள் மற்றும் வெள்ளாடுகள் அபிவிருத்தி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

வறட்சி, பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் பின் தங்கியுள்ள ஊராட்சி ஒன்றியங்கள் மாநில திட்டக்குழுவினரால் தேர்வு செய்யப்பட உள்ளன. இதன்மூலம் கிராமப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புறக்கடை வளர்ப்பு செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள் பயனாளிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட உள்ளன.
ஆடு வாங்க 10% பணம் போதும்!

மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 30 சதவீதமும், பயனாளி 10 சதவீதமும் என்ற நிதி ஆதார முறைமையில் இந்த திட்டமானது 21 மாவட்டங்களில் 83 தொகுதிகளை உள்ளடக்கிய கிராமங்களில் உள்ள தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் பயன் பெறும் வகையில் அமையப் பெற்றுள்ளது.

யார் பயன்பெறலாம்?

நிலமற்ற விவசாயிகள்

சிறு-குறு விவசாயிகள்

வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள விவசாயிகள்

விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள்

மாற்றுத் திறனாளிகள்

ஆகியோருக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதன் மூலம் பயனாளிகளுக்கு 4 முதல் 5 மாத வயதுடைய 10 செம்மறி ஆடுகள் அல்லது வெள்ளாடுகள், 5 முதல் 6 மாத வயதுடைய 1 ஆட்டு கிடாய் வழங்கப்படும்.

பயனாளிகளுக்கான விதிமுறைகள் :

ஆடுகளுக்கு 3 வருடத்திற்கு காப்பீடு செய்யப்படும்.

கிடாய் ஆடுகளை குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கும், பெட்டை ஆடுகளை 3 வருடங்களுக்கும் விற்கக்கூடாது என பயனாளிகளிடம் இருந்து உறுதிமொழி ஒப்பந்தம் பெறப்படும்.

தேர்வு செய்யப்படும் பயனாளிகள் துறைசார்ந்து அமைக்கப்பட்டுள்ள குழுவினருடன் சந்தைகளிலோ அல்லது ஆடு வளர்ப்போரிடமோ தரமான வெள்ளாடு அல்லது செம்மறி ஆடுகளை தேர்வு செய்து வாங்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு ஒருநாள் ஆடு வளர்ப்பு குறித்த பயிற்சி பல்கலைக்கழக பேராசிரியர்களால் வழங்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பொதுமக்கள் அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி விண்ணப்பங்களை அளிக்கலாம்.

ரூ.55000 தில் ஆட்டு பண்ணை அமைக்க அழைப்பு

தேர்வு செய்யப்பட்ட ஒன்றியங்கள்:

திட்ட செயல்பாட்டிற்கென ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர், கமுதி, பரமக்குடி, கடலாடி மற்றும் போகலூர் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்கள் இந்த திட்டத்திற்காக தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இதேபோல், பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பந்தட்டை, வேப்பூர், ஆலத்தூர் ஆகிய ஒன்றியங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

கரூர் மாவட்டத்தில் க.பரமத்தி, அரவக்குறிச்சி, கடவூர், தாந்தோனி, கிருஷ்ணராயபுரம், தோகைமலை ஆகிய ஒன்றியங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து மாவட்டத்திற்க்கும் இத்திட்டம் விரைவில் அமுலுக்கு வரும். பொதுமக்கள் அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி விண்ணப்பங்களை பெறலாம்.

 

Keywords: ஆடு வளர்ப்பு மானியம், ஆடு வளர்ப்பு வங்கி கடன் 2020, கால்நடை வளர்ப்பு மானியம் 2020, ஆடு வளர்ப்பு மானியம் 2020, கால்நடை வளர்ப்பு பயிற்சி 2021, ஆடு வளர்ப்பு தீவனம், கால்நடை வளர்ப்பு மானியம், கால்நடை அபிவிருத்தி திட்டம்

 

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   [email protected]


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   [email protected]


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.  பகிருங்கள் நன்றி

விரிவாக காண்க
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *