< அழகு குறிப்புகள் | தொட்டு பார்க்க தூண்டும் கன்னங்கள் அழகு குறிப்புகள் | தொட்டு பார்க்க தூண்டும் கன்னங்கள்
அழகு குறிப்புகள்

தொட்டு பார்க்க தூண்டும் கன்னங்கள் – அழகு குறிப்புகள்

214

அழகு குறிப்புகள்:

சமப்படுத்தப்பட்ட கன்னங்கள் உங்களுக்கு தெளிவான தோற்றத்தைத் தரும் என்கிறார் ஷபானா பாட்டேகர் வாஹி.

1. முகம் முழுவதும் நன்றாக பிளெண்ட் செய்யப்பட்ட லைட் வெயிட் ஃபவுண்டேஷனை இடவும்.

2. கன்னங்களில் நியூட்ரல் பிங்க் காம்பேக்ட்டை கன்னத்தின் எலும்புகளில் இருந்து கண்ணின் வெளிப்புறம் வரை ஆங்கில சி வடிவில் இடவும். இந்த மேக்கப்புக்கு ஆழமும் நேர்த்தியும் கூட்ட கன்ன எலும்புகளுக்குக் கீழே இன்னும் அடர்த்தியான நிறத்தை பூசவும்.

3. ஐபுரோ பிரஷ் மூலம் புருவங்களைத் திருத்தி நேராக்கவும்.

4. உங்கள் கண்ணின் மேல் இமைகள் முழுவதும் உங்களுக்குப் பிடித்த ஒரு கலரை சமமாகப் பூசவும். மஸ்காராவைச் சேர்க்கவும்.

5. உதட்டில் ஐஸ் பிங்க் நிற லிப்ஸ்டிக் இடவும். ஒற்றி எடுத்துவிட்டு மீண்டும் இட்டு, சமப்படுத்தவும்.

6. உங்கள் கூந்தலை ஸ்டைலாக பின்னிக் கொள்ளலாம் அல்லது லூஸாகவும் விடலாம். ஹெர்ரிங்போன் பின்னல் இட்டுக் கொள்ள விரும்பினால், கூந்தலை இரண்டு பாதியாகப் பிரித்துக் கொள்ளவும். இரண்டிலிருந்தும் நுனிகளை பின்னிக் கொண்டே வந்து, இடையில் கிராஸ் செய்வது போல பின்னவும்.

நன்றி : இணையம்


விளம்பரத்தார் மற்றும் கட்டுரை ஆசிரியரை தொடர்புகொள்ளும் பொழுது மகிழ்.காமில் பார்த்ததாக நினைவு கூறவும். உங்கள் தொழிலை விளம்பரம் செய்ய [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *